×

ரூ.75 கோடி போதை பொருள் கர்நாடகாவில் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கஞ்சா, எம்டிஎம்ஏ உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. இதுதொடர்பாக பேசிய மங்களூரு மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால், ‘மங்களூருவில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூ.75 கோடி மதிப்பிலான 37 கிலோ எம்டிஎம்ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பாம்பா ஃபான்ட் (31) மற்றும் அபிகாயில் அடோனிஸ் (30) என்ற இரு தென்னாப்பிரிக்க பெண்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் வசித்து வந்த இந்த 2 தென்னாப்பிரிக்க பெண்களும், ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சிசிபி போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். அவர்கள் போலி விசாவைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர்’ என்றார்.

The post ரூ.75 கோடி போதை பொருள் கர்நாடகாவில் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Mangaluru City ,Police Commissioner ,Anupam Agarwal ,Mangaluru ,MDMA ,Dinakaran ,
× RELATED திருட்டு வழக்கில் இளைஞரை சித்ரவதை...