×

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது டிராகன் விண்கலம்: சுனிதா வில்லியம்ஸை விரைவில் பூமிக்கு அழைத்துவர ஏற்பாடு

வாஷிங்டன்: சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர அனுப்பப்பட்ட விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. விஅமெரிக்காவின் போயிங் நிறுவனமும், நாசாவும் இணைந்து தயாரித்த புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தின் சோதனை விமானிகளாக இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு சென்றனர். ஹீலியம் கசிவு உள்ளிட்ட கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தொடர்ந்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்து வரும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் க்ரூ-10 விண்கலம் நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில், அமெரிக்காவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள், ஜப்பான் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த தலா ஒரு வீரர்கள் உட்பட 4 பேர் அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. பூமியில் இருந்து வந்தவர்களை விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் குழு உற்சாகமாக வரவேற்றது. வரும் 20-ஆம் தேதி அவர்கள் பூமிக்குப் புறப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

The post சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது டிராகன் விண்கலம்: சுனிதா வில்லியம்ஸை விரைவில் பூமிக்கு அழைத்துவர ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : International Space Exploration Center ,Sunita Williams ,Earth ,Washington ,Wilmore ,International Space Station ,Boeing ,ViAmerica ,NASA ,
× RELATED தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299...