×

ராகுல்காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பா.ஜ திடீர் கேள்வி

புதுடெல்லி: ராகுல்காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது சுவாரசியமாக உள்ளதாகவ பாஜ மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பாஜ தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,“ராகுல் காந்தி எங்கே? அவர் வியட்நாம் சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன். புத்தாண்டின்போதும், ஹோலி பண்டிகையின்போதும் ராகுல் வியட்நாமில் இருப்பதாக கூறப்படுகின்றது. சுமார் 22 நாட்கள் அங்கு ராகுல் செலவிட்டுள்ளார். அவர் தனது தொகுதியில் கூட இவ்வளவு நாட்களை செலவிடுவதில்லை. திடீரென வியட்நாம் மீது அவருக்கு இவ்வளவு அன்பு இருப்பதற்கான காரணம் என்ன? ராகுல்காந்தி வியட்நாம் மீதான அசாதாரணமான அன்பு என்ன என்பதை விளக்க வேண்டும்.

அந்த நாட்டிற்கு அடிக்கடி ராகுல் சென்று வருவது மிகவும் சுவாரசியமானது. கர்நாடக அரசின் இஸ்லாமிய ஒப்பந்ததாரர்களுக்கான இட ஒதுக்கீடு முடிவின் பின்னணியில் ராகுல்காந்தி இருக்கிறார். எதிர்க்கட்சிகளிடையே போட்டித்தன்மை வாய்ந்த வகுப்புவாத மற்றும் வாக்கு வங்கி அரசியலில் காங்கிரசை வழிநடத்துவதற்கு ராகுல் முயற்சிக்கிறார். இதுபோன்ற முடிவு சிறியதாக தோன்றலாம். ஆனால் இதுபோன்ற முன்னேற்றங்கள் தேசிய அளவில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன” என்றார். இதனிடையே ராகுலின் தனிப்பட்ட பயணங்களை பாஜ அரசியலாக்குவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஒரு தனி நபராக அவருக்கு வெளிநாடு செல்வதற்கு உரிமை உள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

The post ராகுல்காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பா.ஜ திடீர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Vietnam ,BJP ,New Delhi ,Ravi Shankar Prasad ,Delhi ,Union Minister ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...