×

நத்தம் ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

நத்தம், மார்ச் 15: நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியக்குமார், சுதர்சன், உக்கிரபாண்டிமுன்னிலை வகித்தனர். இவ்விழாவில் ஒன்றிய அலுவலக ஊழியர்கள், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், முழு சுகாதார திட்ட ஊக்குவிப்பாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தளப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் 5 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) சுரேஷ் நன்றி கூறினார்.

 

The post நத்தம் ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Natham Union Office ,Natham ,World Women's Day ,Natham Uratsi ,Regional Development Officer ,Ki. f ,Zonal ,Sub-Regional Development Officers ,Suriakumar ,Sudharsan ,Ukribandi ,Union Office ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை