×

சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி அமைதியாக வேடிக்கை பார்த்த செங்கோட்டையன்: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் புறக்கணித்தார்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். ஆனால், எடப்பாடி வரிசைக்கு பின் வரிசையில் இருந்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் எழுந்து நிற்காமல், அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அவர் அருகே ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்தார். எடப்பாடி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு பேச அனுமதி அளிக்காததால், பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

அப்போதும், தனது இருக்கையில் செங்கோட்டையன் அமைதியாக இருந்தார். இதை கவனித்த அதிமுக எம்எல்ஏக்கள் சிலர், செங்கோட்டையன் கையை பிடித்து வெளியே அழைத்து சென்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்த சில நிமிடங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அறையில் நடைபெற்றது. இதிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

The post சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி அமைதியாக வேடிக்கை பார்த்த செங்கோட்டையன்: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் புறக்கணித்தார் appeared first on Dinakaran.

Tags : Sengottaiyan ,AIADMK ,AIADMK MLAs ,Chennai ,Opposition Leader ,Edappadi Palaniswami ,Opposition ,Deputy Leader ,R.P. Udayakumar ,Edappadi… ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்