விராலிமலை,மார்ச் 14: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. பொதுவாக மார்கழி, தை மாதங்களில் அதிகாலை அதிக பனிப்பொழிவு இருக்கும். ஆனால், மாசி மாதத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு இருந்து வருகிறது.
இதனால் அருகரு இருக்கும் வீடுகள் கூட தெரியாத சூழல் நிலவியது. பெரும்பாலான மக்கள் விடிந்து நீண்ட நேரமாகிய பின்பு தான் அன்றாட பணிகளுக்கு வெளியில் வரும் சூழல் விராலிமலையில் பகுதியில் ஏற்பட்டது. அம்மன் குளம்,பட்டமரத்தான் குளம், தெப்பக்குளம் உள்ளிட்ட விராலிமலை சுற்றுப்பகுதி வயல்வெளிகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகள் மாறியது. புற்கள் மீது பனிப்படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது விராலிமலை மக்களுக்கு மலைப்பிரதேசம் போல் காட்சியளித்தது புது அனுபவத்தை கொடுத்தது.
The post விராலிமலை காலை பொழுதில் மலைப்பிரதேசம் போல் காட்சியளித்த பனிப்பொழிவு appeared first on Dinakaran.
