- மார்க்சிஸ்ட்
- பொதுவுடைமைக்கட்சி
- செம்பனர்கோயில்
- 24வது அகில இந்திய மாநாடு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
- மாவட்ட செயலாளர்
- சீனிவாசன்
- ஜி. ராமகிருஷ்ணன்…
செம்பனார்கோயில், மார்ச் 14: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நிதியளிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் என்கிற தலைப்பில் கருத்துரையாற்றினார்.
அகில இந்திய மாநாட்டு நிதியாக மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் ஏற்கனவே ரூ.7 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட நிதியாக ரூ.1 லட்சத்தை மாவட்ட செயலாளர், ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். கருத்தரங்கில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், மாரியப்பன், சிம்சன், ரவிச்சந்திரன், விஜயகாந்த், வெண்ணிலா, மார்க்ஸ், அமுல் காஸ்ட்ரோ, ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் துரைக்கண்ணு, கேசவன், ராமகுரு, ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post செம்பனார்கோயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்தரங்கம் appeared first on Dinakaran.
