- தலசயன பெருமாள் கோவில் தெப்போத்ஸவம்
- மாசி ப ourn ர்ணமி
- மாமல்லபுரத்தில்
- தலசயன
- பெருமாள்
- கோவில்
- இந்து சமய மற்றும் அறநிலையத் துறை
- புண்டரிகா
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. மேலும், 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாகவும் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலுக்கு, சொந்தமான புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளம் கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி பவுர்ணமி அன்று தெப்ப உற்சவமும், மறுநாள் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு தலசயன பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவுக்கான, ஏற்பாடுகளை தலசயன பெருமாள் கோயில் நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் தெப்ப உற்சவ கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
The post மாசி பவுர்ணமியை முன்னிட்டு தலசயன பெருமாள் கோயில் தெப்போற்சவம் appeared first on Dinakaran.
