×

தேவாலாவில் மின்னொளியில் கபடிப்போட்டி

பந்தலூர், மார்ச் 14 : பந்தலூர் அருகே தேவாலாவில் மின்னொளி கபடிப்போட்டி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலாவில் வாளவயல் ஆர்ட்ஸ் அண்டு ஸ்போர்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடிப்போட்டி நடைபெற்றது. போட்டியில் 40 அணிகள் பங்கேற்று விளையாடினர். இதில் நெல்லியாளம் வினோத் பிரதர்ஸ் முதல் பரிசான ரூ.30 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையும் தட்டிச்சென்றது. இந்த பரிசை நெல்லியாளம் நகர திமுக செயலாளர் சேகரன் வழங்கினார். இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையை அத்திக்குன்னா என்டிசி அணியினரும், மூன்றாம் பரிசான ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு கோப்பையை நாடுகாணி என்எப்எஸ்சி அணியினரும் தட்டிச்சென்றனர். நான்காம் பரிசு மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

The post தேவாலாவில் மின்னொளியில் கபடிப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Kabaddi tournament ,Devala ,Pandalur ,Kabaddi ,Pandalur, Nilgiris district ,Valavayal Arts and Sports Club ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி