திருப்புவனம், மார்ச் 14: திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் உண்டியல்கள் 40 நாட்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கம். நேற்று உண்டியல்கள் சிவகங்கை உதவிஆணையர் கவிதா,தக்கார் சங்கர், செயல் அலுவலர் மற்றும் கோயில் உதவி ஆணையர் கணபதிமுருகன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
நிரந்தர 9 உண்டியல்களில் ரூ.33 லட்சத்து 28 ஆயிரத்து 574, கோசாலை உண்டியலில் ரூ.76 ஆயிரத்து 922 என மொத்தம் ரூ.33 லட்சத்து 95 ஆயிரத்து 496, தங்கம் 159 கிராம், வெள்ளி 418 கிராம் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது என கோயில் செயல் அலுவலர் கணபதிமுருகன் தெரிவித்தார்.
The post உண்டியல் வசூல் ₹33.95 லட்சம் appeared first on Dinakaran.
