- ஓய்வு பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள்
- மதுரை
- தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்
- திருவள்ளுவர்
- மதுரை மாவட்ட ஆட்சியகம்
- மாவட்டம்
- ஜனாதிபதி
- தமிழரசன்
மதுரை, மார்ச் 14: தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள திருவள்ளுவர் சிலையருகே இச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுசெலவையும் அரசே ஏற்கவேண்டும். மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் கட்டண சலுகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார்.
The post ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
