×

விண்வெளியில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட விண்கலன்கள்; இஸ்ரோ புதிய சாதனை என ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு

பெங்களூர்: விண்வெளியில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட விண்கலன்கள்; இஸ்ரோ புதிய சாதனை என ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகவும். கடந்த டிசம்பர்.30-ல் விண்ணில் ஏவப்பட்ட 2 விண்கலன்கள், ஜனவரி.16. விண்வெளியிலேயே இணைக்கப்பட்டன.

இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. இந்த ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் முதலில் ஜனவரி 7ம் தேதி இணையச் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சனையால் பிரிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இரண்டு விண்கலங்களை ஒன்றாக இணைத்து அவற்றை பிரிகின்ற சோதனையில் தற்போது இஸ்ரோ வெற்றி அடைந்துள்ளது. இதற்கு இஸ்ரோ புதிய சாதனை என ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சாதனை விண்வெளி நிலையம் அமைப்பது, ககன்யான், சந்திராயன் 4 திட்டங்களுக்கு வழிவகுக்கும் என ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

 

The post விண்வெளியில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட விண்கலன்கள்; இஸ்ரோ புதிய சாதனை என ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : EU ,-minister ,Jitendra Singh ,ISRO ,BANGALORE ,UNION ,MINISTER ,International Space Centre ,India ,
× RELATED டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி