×

பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை: தொழிலாளர்கள் அச்சம்

பந்தலூர்: பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளான கொளப்பள்ளி கருத்தாடு, தட்டாம்பாறை, குந்தலாடி, பாக்கனா, மழவன் சேரம்பாடி, சேரம்பாடி டேன்டீ, சேலக்குன்னு, தேவகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை திரிந்து வருகிறது. இந்த யானை கடந்த பல மாதங்களாக குடியிருப்புகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள், சாலையோரத்தில் சுற்றித்திரிகிறது. இதனால் பொதுமக்கள், தோட்டத்தொழிலாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

அவ்வப்போது சாலையில் குறுக்கிட்டு வாகனங்களை ஒற்றை யானை வழி மறிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. ஒன்றை யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். யானை நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை: தொழிலாளர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : BANDALORE ,BANDALUR DISTRICT ,Nilagiri District Bandhalur district ,Kollapalli Sauthadu ,Dattampara ,Kundaladi ,Pakana ,Malavan Serampadi ,Serampadi Danti ,Salakunnu ,Devagiri ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் சுல்தான்...