×

திருவளக்குறிச்சியில் ராஜா மலை பகுதியில் நகரும் ரேஷன் கடை

 

பாடாலூர், மார்ச் 13: ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி கிராமத்தில் உள்ள ராஜாமலை பகுதிக்கு நடமாடும் ரேஷன் கடை நேற்று தொடங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி கிராமத்தில் ராஜா மலை பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நகரும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. எம்.பிரபாகரன் தலைமையில் நகரும் ரேஷன் கடை பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் விற்பனை செய்து குடிமைப் பொருட்களை வழங்கினார். இதன் மூலம் சுமார் 32 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையவர். இதில் அட்மா திட்ட தலைவர் ஜெகதீசன், துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) சிவகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன்,

ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், பறக்கும் படை தாசில்தார் பாக்கியராஜ், கூட்டுறவு சார் பதிவாளர் காசியம்மாள், கூட்டுறவு ஒன்றிய மேலாளர் சாமிநாதன், சங்க செயலாளர் கோவிந்தசாமி, விஏஓ பாலுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருண், திமுக நிர்வாகிகள் சின்னதுரை, ஆனந்த், ரேஷன் கடை விற்பனையாளர் குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவளக்குறிச்சியில் ராஜா மலை பகுதியில் நகரும் ரேஷன் கடை appeared first on Dinakaran.

Tags : Raja Malai ,Thiruvalakurichi ,Patalur ,Thiruvalakurichi village ,Alathur taluka ,Perambalur district ,
× RELATED தேர்வு மையத்தில் ஐஜி, எஸ்பி ஆய்வு; கடும் பனிப்பொழிவு குளிரால் மக்கள் அவதி