×

டிஜிட்டல் கைதுகள், சைபர் குற்றங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு: உள்துறை இணை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கடந்த 2022-24 காலக்கட்டங்களில் டிஜிட்டல் கைதுகள், சைபர் குற்றங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 21 மடங்கு அதிகரித்துள்ளது என்று மாநிலங்களவையில் அரசு தெரிவித்துள்ளது. உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில் ‘‘கடந்த 2022ல் டிஜிட்டல் கைது மோசடிகள், அதனுடன் சம்மந்தப்பட்ட சைபர் குற்றங்கள் மொத்தம் 39,925 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் மொத்தம் ரூ.91.14 கோடி மோசடி நடந்துள்ளது.2024ல் இது போன்ற சம்பவங்கள் 1,23,672 என மூன்று மடங்காக உயர்ந்துள்ளன. இதில், மொத்தம் ரூ.1935.51 கோடி மோசடி நடந்துள்ளது. 2025ம் ஆண்டில் முதல் 2 மாதங்களில் 17,718 வழக்குகள் பதிவாகியுள்ளன’’ என்றார்.

The post டிஜிட்டல் கைதுகள், சைபர் குற்றங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு: உள்துறை இணை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister of State for Home Affairs ,New Delhi ,Rajya Sabha ,Union Minister of ,State ,for Home Affairs… ,Dinakaran ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...