×

இடைக்காட்டூரில் அமுது படையல் விழா

மானாமதுரை, மார்ச் 13: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் ஆழிமணிகண்டேசுவர் சவுந்திரநாயகி கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு அங்குள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்திற்கு பின் மாசிமக பூஜைகள், மகா தீபராதனை நடந்தன. அதன்பின் சிவனடியார்கள், முருகபக்தர்களுக்கு வாழை இலையில் படி அரிசி, காய்கறிகள், பழங்கள், மளிகைபொருட்கள், தட்சணை காணிக்கை உள்ளிட்டவைகள் படைத்து அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்செந்தூர், பழநி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட அறுபடை வீடுகளில் இருந்து முருகனடியார்கள், மதுரை, திருநெல்ேவலி மாவட்டத்தில் உள்ள சிவனடியார்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post இடைக்காட்டூரில் அமுது படையல் விழா appeared first on Dinakaran.

Tags : Amudhu Padayal Festival ,Idakkatur ,Manamadurai ,Balamurugan ,Azhimanikandeswar Soundranayagi ,Masi Maham ,Masi Maham Poojas ,Maha Deeparathanai ,Shiva ,Muruga ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை