- சுப்ரமணியர்
- கொடி மர நிறுவல்
- தர்மபுரி
- சுப்பிரமணியா சுவாமி
- Papparapatti
- Kumbabhishekam
- ஆனி
- பாப்பாரப்பட்டி பழையது
- கோவில்
- கொடி மரம்
தர்மபுரி, மார்ச் 13: பாப்பாரப்பட்டியில் பழைய சுப்பிரமணியசுவாமி கோயில் கட்டும் பணி, கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கும்பாபிஷேக விழா, வரும் ஆனி மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை, பாப்பாரப்பட்டி பழைய சுப்பிரமணிய சுவாமி கோயில் கொடிமரம் பிரதிஷ்டை நடந்தது. முன்னதாக, விழாக்குழுவினர் கலசம் எடுத்து வீதி உலா வந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கந்த சஷ்டி கவசம் பாடினர். கிரேன் உதவியுடன் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
The post பாப்பாரப்பட்டி சுப்பிரமணியர் கோயில் கொடிமரம் பிரதிஷ்டை appeared first on Dinakaran.
