×

மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை எடுத்துக் கொண்டதால் நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தியாவில் எங்குமே மும்மொழிக் கொள்கை முழு அளவில் இல்லை. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருந்தாலும் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருமொழிக் கொள்கையைக்கூட முழுமையாக நிறைவேற்ற முடியாதவர்கள் நம் மீது மும்மொழி கொள்கையை திணிக்க பார்க்கிறார்கள் என அவர் கூறினார்.

 

The post மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,P. D. R. Palanivel Thyagarajan ,Madurai ,B. D. R. Palanivel Thiagarajan ,Tamil Nadu ,India ,P. D. R. Palanivel Thiagarajan ,Dinakaran ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...