×

மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. பதில்

டெல்லி:தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தியை திணிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருவதாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் கேள்வி நேரத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைசர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது தமிழக எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என அவர் குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்தது. உடனே அவர் திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினார்.

தர்மேந்திர பிரதானின் சர்ச்சைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவையில், தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டார். மேலும் தர்மேந்திர பிரதான், மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதாக கூறி தமிழக அரசின் கடிதத்தையும் அவையில் வாசித்தார். இந்த கடிதத்தை அவர் தனது ‘எக்ஸ்’ தளத்திலும் பதிவேற்றி உள்ளார்.

இந்த கடிதத்துக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள திமுக எம்.பி.கனிமொழி:
இந்தக் கடிதத்தில், தமிழ்நாடு PM SHRI பள்ளிகளை தமிழ்நாடு மாநில அரசு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்றும், உங்கள் மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை.

தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் – அதிகமாகவோ, குறைவாகவோ எதுவும் இல்லை. உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. பதில் appeared first on Dinakaran.

Tags : NEP ,Minister of Education of the ,Union ,M. B. ,Delhi ,BJP government ,M. K. ,Education Minister ,Dharmendra Pradhan ,Union Minister of ,Education ,
× RELATED மக்களை காக்க குரல் தரச் சொன்னால்...