×

திருப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு கண் சிகிச்சை முகாம்

 

காரைக்கால், மார்ச் 12: உலக கண் நீர் அழுத்த நோய் வாரம் மார்ச் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜிப்மர் காரைக்கால் கண் சிகிச்சை நிபுணர்கள் நிருபன் மற்றும் ராஜலட்சுமி கண்நீர் அழுத்த நோய் பரிசோதனையை நவீன உபகரணங்களைக் கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்தனர்.

இந்நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர். இந்த சிறப்பு கண் மருத்துவ முகாம் வருகிற 16ம் தேதி வரை காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இன்று (12ம்தேதி) நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஜிப்மர் மற்றும் காரைக்கால் நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

The post திருப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Tirupattinam Primary ,Health Center ,Karaikal ,World Eye Disease Week ,JIPMER ,Tirupattinam Government Primary Health Center ,Tirupattinam Primary Health Center ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு