சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கான விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 பேரை பள்ளிக் கல்வித்துறை டிஸ்மிஸ் செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் மேற்கண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீது பாலியல் புகார்கள் பெறப்பட்டது. அவற்றின் மீது தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் முதற்கட்டமாக 17 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதில் சிலர் சிறைக்கு சென்றனர். சிலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். ஒருசிலர் இறந்துவிட்டனர். இரண்டாம் கட்ட விசாரணையில் 46 புகார்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில் 26 பேர் பாலியல் புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 23 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்கள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். அதன் பேரில் தற்பேது அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் புகார் நிரூபிக்கப்பட்ட 23 பேர் டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
The post பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய 23 ஆசிரியர், பணியாளர்கள் டிஸ்மிஸ்: அமைச்சர் நடவடிக்கை appeared first on Dinakaran.

