×

தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் 1.65 லட்சம் மக்கள் பயன்: காஞ்சி கூட்டத்தில் சபாபதி மோகன் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஒவ்வொரு தொகுதியிலும் தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் 1.65 லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர் என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி உள்ளிட்டவைகளை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும், கண்டன பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நடந்தது.

மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் ஏற்பாடுகளை செய்து, வரவேற்று பேசினார். மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி செயலாளர் சந்துரு, தசரதன், திலகர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், பி.எம்.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் பேராசிரியர் சபாபதி மோகன், இளம் பேச்சாளர் மோக நிதி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் சன் பிராண்டு ஆறுமுகம், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் பிரபு கஜேந்திரன், அப்துல் மாலிக் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் பேசியதாவது: சராசரியாக ஒரு மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுக்க வேண்டிய பங்களிப்பு 3.5 விழுக்காடு. ஆனால், இந்தியாவின் உற்பத்திக்கு தமிழ்நாடு தருவது 9 விழுக்காடு. 9 விழுக்காடு கொடுத்தாலும் ஒன்றிய அரசு 100 ரூபாய்க்கு 29 ரூபாய் திரும்பத் தருகிறது. தமிழ்நாட்டிற்கு 45,000 கோடி கொடுத்தால், உத்திரபிரதேசத்திற்கு 2.65 லட்சம் கோடி தருகிறார்கள். தமிழ்நாட்டில் எம்பி தொகுதி 39, உத்திரப்பிரதேசத்தில் 80 என்றால் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியிலிருந்து இரண்டு மடங்கு கூடுதலாக கொடுக்கலாம். ஆனால், 2.65 லட்சம் கோடி தருகிறார்.

பங்களிப்பு பகிர்வில் ஒன்றிய மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. அகழ்வாராய்ச்சியில் ஆராய்ச்சி செய்ய ஒத்துழைக்க மாட்டார்கள். இங்குள்ள ஆளுநர், அமெரிக்காவில் திருக்குறளை பேசிவிட்டு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதுதான் வேலை. இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று சட்டங்களை எதிர்த்து, தீர்மானங்கள் நிறைவேற்றிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்னும், 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் உற்பத்தி முதல்வர் சொன்னதைப்போல 1 டிரில்லியன் எட்டி பிடிக்கும்.மோடி சொல்வதைப்போல் தமிழ்நாட்டில் இந்தியாவில் 5 வருடத்தில் 5 டிரில்லியன் டாலர் எட்டும். ஆனால், தற்போது நிலவரப்படி மற்ற மாநிலங்கள் 4 டிரில்லியன் எட்டினால் போதும், தமிழ்நாடு தற்போது வரை 12 லட்சம் கோடி தாண்டிவிட்டது.

மேலும், இடஒதுக்கீட்டில் வெற்றி, பெண் உரிமையில் வெற்றி, மதநல்லிணக்கத்தில் வெற்றி, இந்தி திணிப்பு, நிதி பகிர்வு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவைகளில் வெற்றிபெற மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. ஒரு தொகுதியில் 50,000க்கும் மேற்பட்டவார்கள் 1000 ரூபாய் உரிமைத்தொகை, 40,000 பேர் கட்டணமில்லா பயணம், 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூபாய் 1,000, புதுமைப்பெண் திட்டத்தில் 1,000 என ஒவ்வொரு தொகுதியிலும் தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் 1.65 லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மணி, பால்ராஜ், சஞ்சய் காந்த், ஆண்ட்ரூ சிரில் ராஜ், எஸ்.யுவராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார், துணை அமைப்பாளர் அருள் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

The post தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் 1.65 லட்சம் மக்கள் பயன்: காஞ்சி கூட்டத்தில் சபாபதி மோகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Sabapathi Mohan ,Kanji ,Kanchipuram ,Kanjipura ,Dimuka Policy ,Kanchipuram Southern District ,Dimuka Youth ,
× RELATED ஏ.சி.சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து