×

கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் பர்மா காலனியில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான பொது கிணற்றில் ஒரு சிறுவனின் உடல் சடலமாக மிதப்பதாக நேற்று நந்தம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் அங்கு சென்று சிறுவனின் சடலத்தை மீட்டனர். விசாரணையில், ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் பரமசிவம் (14) என்பதும், இந்த சிறுவன் காணாமல் போனதாக எம்.ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

கே.கே நகரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்களிடம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு நண்பருடன் சேர்ந்து நந்தம்பாக்கம் பர்மா காலனியில உள்ள கிணற்றில் குளித்தபோது மூச்சு திணறி இறந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நந்தம்பாக்கம் போலீசார் சிறுவனின் சடலத்தை எம்ஜிஆர் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து. போலீசார் சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Alandur ,Nandambakkam ,Nandambakkam Burma Colony ,Zaberkanbet ,
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு காதலியின்...