×

சென்னையின் நுழைவு வாயில் செங்கல்பட்டு – முதல்வர் மு.க.ஸ்டாலின்


செங்கல்பட்டு: சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது செங்கல்பட்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்க திமுக ஆட்சியில் பல்வேறு நிறுவனங்கள் அமைத்துள்ளன. மகிந்திரா, விப்ரோ, பிஎம்டபிள்யூ, பாக்ஸ்கான், சாம்சங், இன்போசிஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழ் கலை பெருமை சொல்லும் மாமல்லபுரம் அமைந்துள்ள மாவட்டம் செங்கல்பட்டு என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதி தருவோம் என்று மிரட்டுகிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்யும் அத்தனை முயற்சிகளும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களுக்கு கூட பொதுத்தேர்வு, அனைத்துக்கும் நுழைவுத் தேர்வு என்று எல்லாம் இருக்கிறது. 2000 கோடி இல்ல 10,000 கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். தர்மேந்திர பிரதான் பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பப்பெற வைத்துள்ளனர் திமுக எம்.பி.க்கள். கலைஞரின் வாரிசுகள் என்பதை திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நிரூபித்துள்ளனர் என்றும் கூறினார்.

The post சென்னையின் நுழைவு வாயில் செங்கல்பட்டு – முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Principal ,M.U. ,Chennai ,K. Stalin ,Chengalpattu District ,Dimuka ,Mahindra ,Vipro ,BMW ,Foxconn ,Samsung ,Infosys ,Mu. ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...