- திமுகா
- மத்திய அமைச்சர்
- தர்மமேந்திர பிரதான்
- தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
டெல்லி: திமுகவின் கடும் எதிர்ப்பை அடுத்து, அவை குறிப்பில் இருந்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அநாகரீக பேச்சுகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள ஒன்றிய அரசுக்கு, நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அப்போது ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் பேசினார். தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு அவையிலேயே திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். பிரதானுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். இதனிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து தனது பேச்சை தர்மேந்திர பிரதான் திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், திமுகவின் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை அடுத்து, அவைக் குறிப்பிலிருந்து தர்மேந்திர பிரதானின் அநாகரிகப் பேச்சுக்கள் நீக்கம் செய்யப்பட்டன. சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவின்பேரில் அவை குறிப்பிலிருந்து பிரதானின் பேச்சுக்கள் நீக்கப்பட்டுள்ளன.
The post திமுகவின் கடும் எதிர்ப்பை அடுத்து, அவை குறிப்பில் இருந்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அநாகரீக பேச்சுகள் நீக்கம் appeared first on Dinakaran.

