×

திருவாரூர் ராபியம்மான் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

 

திருவாரூர்.மார்ச் 11: திருவாரூர் ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. திருவாரூர் வாசன் நகரில் இயங்கி வரும் ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழாவானது கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் செயலாளர் பெரோஸ்ஷா தலைமையில் நடைபெற்றது. முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக நாகை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் போக்சோ வழக்கிற்கான சிறப்பு நீதிபதி கார்த்திகா கலந்து கொண்டு பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதிக்க கூடியவை போன்றவை குறித்து விளக்கி பேசினார். விழாவில் கல்லூரியில் சிறப்பாக செயலாற்றிய பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். முடிவில் கணினி அறிவியல் துறை தலைவர் ரசூல்பேகம் நன்றி கூறினார்.

 

The post திருவாரூர் ராபியம்மான் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Rabiyamman Ahmed Meideen Women's College ,Tiruvarur ,Vasan Nagar, Tiruvarur ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை