திருக்காட்டுப்பள்ளி, மார்ச்10: பூதலூர் அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார். பூதலூர் அருகே சித்திரக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜன் மகன் கலைக்கோவன்(76). இவர் விஏஓ வாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றதில் இருந்து வீட்டில் இருந்து வந்தவர் கடந்த 5ம் தேதி வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்ததில் மயக்கம் அடைந்துள்ளார்.
உடனடியாக அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பலனி ன்றி நேற்று இறந்தார். இது குறித்து அவரது மகன் சுதாகர் பூதலூர் போலீ சில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் சூர்யா விசாரணை மேற்கொண்டுள்ளார்.
The post பூச்சி மருந்து குடித்து ஓய்வு பெற்ற விஏஓ தற்கொலை appeared first on Dinakaran.
