- திமுக
- மத்திய அமைச்சர்
- தர்மமேந்திர பிரதான்
- நாகப்பட்டினம்
- மாவட்ட செயலாளர்
- Gauthaman
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செயலாளர்கள்
- மாரிமுத்து,
- செந்தில்குமார்…
- தின மலர்
நாகப்பட்டினம், மார்ச் 11: தமிழக திமுக எம்பிக்களை அவதுறாக பேசிய ஒன்றிய அமைச்சர் உருவ படத்தை நாகப்பட்டினத்தில் திமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், நகர செயலாளர்கள் மாரிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக திமுக எம்பிக்களை அவதுறாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ படத்தை எரித்தனர். ஒன்றிய செயலாளர் ஆனந்த், நகர துணை செயலாளர்கள் திலகர், சிவா மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post நாகப்பட்டினத்தில் திமுக சார்பில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ படம் எரித்து போராட்டம்: மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.
