×

புறாக்கிராமம் தொடக்க பள்ளியில் மகளிர் தின விழா

 

நாகப்பட்டினம், மார்ச் 11: திருமருகல் அருகே புறாக்கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகளிர் தினவிழா விழா நடந்தது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நடந்த மகளிர் தின விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் புவனராணி தலைமை வகித்தார். மாநில தலைமை நிலைய செயலாளர் ரமேஷ், மாநில மூத்தோரணி அமைப்பாளர் செல்வகணபதி, வட்டார கல்வி அலுவலர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரடாச்சேரி வட்டாரக்கல்வி அலுவலர் விமலா, பணி நிறைவு பெற்ற கண்காணிப்பாளர் கன்னிகா பரமேஸ்வரி, சுசிலா ஆகியோர் மகளிருக்காக பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மன்றத்தின் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மன்ற மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.

The post புறாக்கிராமம் தொடக்க பள்ளியில் மகளிர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Purakramam Primary School ,Nagapattinam ,Purakramam Panchayat Union Primary School ,Thirumarugal ,Tamil Nadu Primary School Teachers' Association ,World Women's Day ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை