×

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி

மதுரை: வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று லேசான நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்றிரவு செய்யப்பட்ட பரிசோதனையில் இன்று அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதில் அமைச்சர் மூர்த்தி கொரோனா பெருந்தொற்று காரணமாக பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மூர்த்தியுடன் கடந்த 2 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கா.ராமசந்திரன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் கடந்த 2 நாட்கள் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுமாறும், தாங்கள் தங்களை தனிமைப்படத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். …

The post வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி appeared first on Dinakaran.

Tags : Commercial ,Taxes and ,Deeds ,Minister ,Murthy ,Forest ,K. Ramachandran ,Madurai ,Minister for Commercial Taxes and Deeds Murthy ,Taxes and Securities ,Minister Murthy ,Forest Minister ,Dinakaran ,
× RELATED புதிய வழிகாட்டி மதிப்பு வரைவு அறிக்கை...