×

சோழவரம், புழல் ஒன்றிய திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு மருத்துவ முகாம்: சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு

புழல்: சோழவரம் தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு சோழவரம் அடுத்த ஒரக்காடு கிருதலாபுரம் கிராமத்தில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சரஸ்வதி செல்வம் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் 500 பேருக்கு பிரியாணி வழங்கினார்.

இதேபோல் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநல்லூர் கிராமத்தில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் 500 பெண்களுக்கு சேலை மற்றும் பிரியாணிகளை எம்எல்ஏ வழங்கினார். காந்திநகர் முத்துமாரியம்மன் கோயில் அருகில் திமுக இளைஞரணி பிரமுகர் பாலாஜி ஏற்பாட்டில் நல்லூர் ஊராட்சியில் பணியாற்றும் 30 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்புக்கு உபகரணங்களை வழங்கி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

மேலும், புழல் ஒன்றிய திமுக சார்பில் ரத்த தான முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் செங்குன்றம் அடுத்த வடகரை சமுதாயக்கூடம் வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் அற்புதராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய திமுக துணைச் செயலாளர் முருகன், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் இனியன், புழல் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுதர்சனம் எம்எல்ஏ ரத்ததானம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் 27 பேர் ரத்ததானம் வழங்கினார்கள். வடகரை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளை மேற்கொண்டனர். விழாவில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் மணி, பாரதி சென்றம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராமு, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சாமு, கபிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சோழவரம், புழல் ஒன்றிய திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு மருத்துவ முகாம்: சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Puzhal Union DMK ,Sudarsanam MLA ,Puzhal ,Cholavaram South Union DMK ,Saraswathi Selvam ,District Women's Volunteer Team ,Orakadu Kritalapuram ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...