×

ஏற்காட்டில் சென்றாய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ஏற்காடு, மார்ச் 11: ஏற்காட்டில், சென்றாய பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மறுநாள்(8ம் தேதி) யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது. நேற்று காலை, 4ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post ஏற்காட்டில் சென்றாய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Sendraya Perumal Temple ,Kumbabhishekam ,Yercaud ,Vazhavanthi village ,Ganapathi Homam ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்