×

பெண்களுக்கு விருது

சிவகங்கை, மார்ச் 11: சிவகங்கையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க தலைவர் ஒண்டிராஜ் முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து களம் இறக்கிய காளைகளின் உரிமையாளர்களான 41 பெண்கள் உள்ளிட்ட 78 பேருக்கு ராணி வேலு நாச்சியார் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க கௌரவத்தலைவர், இலங்கை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான் விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க மாநில இணைச்செயலாளர் அருண்குமார், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ்குமார், கனகராஜ், செல்வா, பிரபுசேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெண்களுக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Women's Day ,Tamil Nadu Jallikattu Protection Welfare Association ,Rani Madhurantaki Nachiyar ,President ,Ondiraj ,Jallikattu ,Tamil Nadu… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை