×

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை கடைப்பிடிக்க கோரிக்கை: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் மற்றும் சமூக நீதியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறஞர்கள் நேற்று உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் வி.எம்.ரகு, மூத்த செயற்குழு உறுப்பினர்கள் அனீஸ், ரமேஷ், இளைய செயற்குழு உறுப்பினர் பிரவீண் சமாதானம், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர் கே.பாலு, பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி என்.எஸ்.ரேவதி உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தால் என்.எஸ்.சி.போஸ் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை கடைப்பிடிக்க கோரிக்கை: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,Aavin Gate ,High Court ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...