×

விஜய் ஆண்டனிக்கு எதற்கு இந்த நடிப்பு என்று யோசித்தேன்: இயக்குனர் பாரதிராஜா

விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வெளியான ’பிச்சைக்காரன் 2’ படத்தைப் பார்த்த இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா கூறுகையில், ‘விஜய் ஆண்டனி ஒரு நல்ல இசை அமைப்பாளர் ஆயிற்றே. அவருக்கு எதற்கு இந்த நடிப்பு என்று யோசித்தேன். பிறகு ‘பிச்சைக்காரன்’ படம் பார்த்தேன். சிறப்பாக நடித்திருந்தார். கமர்ஷியலாகவும் இப்படம் அருமையாக இருந்தது. சசி ஒரு திறமையான இயக்குனர். அவரது ‘பூ’ படத்தைப் பார்த்து மிரண்டுவிட்டேன்.

கடவுள் விஜய் ஆண்டனிக்கு இரண்டாவது வாழ்க்கையைக் கொடுத்திருப்பது அவரது மனைவி ஃபாத்திமாவுக்காகவும், ரசிகர்களுக்காகவும்தான். இன்னும் விஜய் ஆண்டனி இவ்வுலகில் இருந்து செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. எல்லா இயக்குனர்களுக்கும் ரைட்டர்ஸ் என்பவர்கள் மிகவும் முக்கியம். எனது பல படங்கள் வெற்றிபெற ரைட்டர்கள்தான் காரணம். அதுபோல், விஜய் ஆண்டனிக்கு இப்படத்தில் சசி என்ற ரைட்டர் கிடைத்திருக்கிறார். விஜய் ஆண்டனி கண்டிப்பாக ஜெயிப்பார்’ என்றார்.

The post விஜய் ஆண்டனிக்கு எதற்கு இந்த நடிப்பு என்று யோசித்தேன்: இயக்குனர் பாரதிராஜா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Antony ,Bharathiraja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch