×

கோயம்பேடு ஆரம்ப காலம் முதல் செயல்பாட்டிலிருந்த கட்டண கழிவறைகள் அனைத்தும் இன்று முதல் கட்டணமில்லா பொதுக் கழிவறைகளாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் நிர்மாணிக்கப்பட்ட காய்கறி, கனி மற்றும் மலர் அங்காடியினை உள்ளடக்கிய கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தின் பராமரிப்பு பணிகளை அங்காடி நிர்வாக குழு நிர்வகித்து வருகிறது. வளாகத்தின் சுற்றுப்புற தூய்மையை கருத்தில் கொண்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்களின் உத்தரவின்படி வளாக ஆரம்ப காலம் முதல் இதுநாள் வரை கட்டண கழிவறைகளாக செயல்பாட்டிலிருந்த கழிவறைகள் அனைத்தும் கட்டணமில்லா பொதுக் கழிவறைகளாக இன்று முதல் (10.03.2025) செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மேற்படி 68 எண்ணிக்கையிலான கழிவறைகளின் தொகுப்புகளில் மகளிருக்கென 23 எண்ணிக்கையிலான கழிவறைகளும் உள்ளடக்கியதாகும். இதுமட்டுமல்லாது 10 எண்ணிக்கையிலான சிறுநீர் கழிப்பிடங்களும் அடங்கும். இதனை பராமரிக்க குறைந்தபட்ச ஒப்பந்த புள்ளி கோரிய நிறுவனத்திற்கு பணியானை வழங்கப்பெற்றுள்ளது. மேலும் வளாக வியாபாரிகளின் வேண்டுகோளினை ஏற்று வளாக சாலைகளை ஒட்டியுள்ள இடங்களில் கூடுதலாக 10 எண்ணிக்கையிலான கழிவறைகள் விரைந்து கட்டிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வளாகத்தில் கட்டண கழிவறைகளை இலவச கழிவறைகளாக செயல்பாட்டுக்கு வந்தமைக்கு வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் ஆகியோர் மகிழ்ந்து வரவேற்றதோடு அரசுக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

 

The post கோயம்பேடு ஆரம்ப காலம் முதல் செயல்பாட்டிலிருந்த கட்டண கழிவறைகள் அனைத்தும் இன்று முதல் கட்டணமில்லா பொதுக் கழிவறைகளாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Coimbed ,Coimbed Wholesale Store Complex ,Vegetable ,Kani ,Flower Shop ,Chennai Metropolitan Development Group ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...