×

கீழ்பவானி பாசன பகுதியில் கதிர்கள் முற்றாததால் நெல் அறுவடை தாமதம்

சத்தியமங்கலம் : பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் சில நாட்களிலேயே ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் கரை உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு கரை உடைப்பு சரி செய்து ஒரு மாதம் கழித்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.இதன்காரணமாக பவானிசாகர், சத்தி,கோபி, ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கீழ்பவானி பாசன பகுதியில் விவசாயிகள் குறித்த நேரத்திற்கு நெல் பயிரிட முடியாமல் காலதாமதமாக நடவு பணி மேற்கொண்டனர்.வழக்கமாக பொங்கலுக்கு முன் அறுவடை முடிந்துவிடும்  நிலையில்,நெற்கதிர்கள் முற்றாததால் அறுவடை பணிகள் தொடங்கவில்லை. அறுவடையை எதிர்பார்த்து ஆத்தூர், ராசிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் சத்தியமங்கலம் பகுதியில் இயந்திரங்களைக் கொண்டு வந்து தயார் நிலையில்  நிறுத்தி வைத்துள்ளனர்.அறுவடை தாமதமாவதால்  இயந்திர உரிமையாளர்கள் வருமானம் இன்றி தவிப்பதோடு, நெல் அறுவடை எப்போது தொடங்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்….

The post கீழ்பவானி பாசன பகுதியில் கதிர்கள் முற்றாததால் நெல் அறுவடை தாமதம் appeared first on Dinakaran.

Tags : Kilibhavani ,Sathyamangalam ,Bhavanisagar dam ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த...