×

தமிழ்நாட்டு மக்கள் நாகரிகமற்றவர்கள் என்ற வார்த்தையை திரும்பப் பெற்றார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்..!!

டெல்லி: தமிழ்நாட்டு மக்கள் நாகரிகமற்றவர்கள் என்ற வார்த்தையை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்பப் பெற்றார். தமிழர்கள் அநாகரீகமானவர்கள் என்று தர்மேந்திர பிரதான் கூறியதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்தார். கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து அநாகரீகமானவர்கள் என்ற வார்த்தையை தர்மேந்திர பிரதான் திரும்பப் பெற்றார். தமிழ்நாடு பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டதாக பிரதான் மீண்டும் பேசியதற்கு தமிழ்நாடு எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் திமுக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

The post தமிழ்நாட்டு மக்கள் நாகரிகமற்றவர்கள் என்ற வார்த்தையை திரும்பப் பெற்றார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Dharmendra Pradhan ,Tamil Nadu ,Delhi ,Union Minister ,Kanimozhi M. B. ,Dharmendra ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...