×

பெரம்பலூர் மாவட்டத்தில் அஞ்சலகம் மூலம் வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்பலாம் ரங்கம் கோட்ட கண்காணிப்பாளர் அழைப்பு

பெரம்பலூர், மார்ச் 10: பெரம்பலூர் மாவட்டத்தில் அஞ்சலகம் மூலம் குறைந்த செலவில் வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:குறைந்த செலவில் வெளிநாட்டிற்கு அஞ்சலகம் மூலமாக பார்சல் அனுப்பும் திட்டத்தை அஞ்சல் துறை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும், இதற்கான பிரத்தியேக கவுண்டர்கள் ரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மூன்று தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.வாடிக்கையாளர்கள் பொருட்களை மட்டும் அஞ்சல் அலுவலகத்திற்கு எடுத்து வந்தால் போதுமானது. வாடிக்கையாளர்களின் முன்னிலையில் அஞ்சல் துறையின் சின்னம் பொறித்த அட்டைப்பெட்டி மூலம், இதற்கான பிரத்தியேக இயந்திரம் மூலம் பேக்செய்து அனுப்பப்படும். இதில், ஏற்றுமதியாளர்களுக்கு தனித்துவமான சேவை செயல்பட்டு வருகிறது. மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் அஞ்சலகம் மூலம் வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்பலாம் ரங்கம் கோட்ட கண்காணிப்பாளர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Rangam Divisional ,Perambalur ,Rangam Postal Divisional ,Superintendent ,Abdul Latheef ,Rangam Divisional Superintendent ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...