×

இரை தேடி வந்த கொக்குகள் முன்னாள் படை வீரர்களுக்கு ₹1 கோடி வரை கடனுதவி

நாகப்பட்டினம், மார்ச் 10: நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் சார்ந்தோர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.

இதன்படி இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிக சொற்ப எண்ணிக்கையிலான முன்னாள் படைவீரர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். சுயதொழில் செய்ய விருப்பமுள்ள 55 வயதிற்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்தம் விதவையர்கள், திருமணமாகாத அல்லது விதவை மகள்கள் மற்றும் 25 வயதிற்கு உட்பட்ட திருமணமாகாத மகன்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பாக கூட்டம் வரும் 12ம் தேதி மாலை 11 மணிக்கு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். கூடுதல் தகவல் பெற நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post இரை தேடி வந்த கொக்குகள் முன்னாள் படை வீரர்களுக்கு ₹1 கோடி வரை கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,District ,Collector ,Akash ,Chief Minister ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை