×

செங்கல் உற்பத்தி விறுவிறுப்பு

தர்மபுரி, மார்ச் 10: கோடை ெவயில் தொடங்கியதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சூளைகளில் செங்கல் உற்பத்தி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக செங்கல் உற்பத்தி செய்யும் தொழில் உள்ளது. தர்மபுரியில் தயாராகும் செங்கல் வேலூர், சென்னை மற்றும் பெங்களூரு, கேரளா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தர்மபுரியில் தயாராகும் செங்கல் வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்துவதால், செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பனைகுளம், வத்திமரதஅள்ளி, கிட்டம்பட்டி, திருமல்வாடி, நல்லப்பநாயக்கனஅள்ளி, வேப்பிலைஅள்ளி போன்ற கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதே போல் செட்டிக்கரை, குப்பூர், சித்தன்கொட்டாய் கிராமங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சூளைகள் செயல்படுகின்றன.

இந்த சூளைகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒவ்வொரு சூளையிலும் சுமார் 5 நாளைக்கு ஒரு முறைக்கு 5ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை என செட்டிக்கரை பகுதியில் மட்டும் தினமும் ஒரு லட்சம் கற்கள் தயாராகும். இங்கு தயாராகும் செங்கல் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சாதாரண செங்கல், அச்சுக்கல் என இரு ரகங்களாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் சாதாரண செங்கல் ₹7க்கும், அச்சுக்கற்கள் ₹9வரை விற்பனை செய்யப்பட்டது. அச்சுக்கற்கள் தான் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை பகுதியில் சில நாட்களாக மழை இல்லாததால், சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

The post செங்கல் உற்பத்தி விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Vellore, ,Chennai ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை