மண்டபம்,மார்ச் 10: மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழல்குடையை சேதப்படுத்தி வளர்ந்து வரும் மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சிமெண்ட் கான்கிரீட்டால் மூடப்பட்ட பயணிகள் நிழல்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மரைக்காயர்பட்டிணம், முனைக்காடு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பேருந்துகளுக்கு காத்திருந்து செல்லுகின்றனர்.
இதனால் இந்த நிழற்குடையில் பயணிகளின் வருகை எந்த நேரமும் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் இந்த நிழற்குடை அருகே பழமையான பூவரசு மரம் ஒன்று வளர்ந்து வருகிறது. இந்த மரத்தின் ஒரு கிளை நிழற்குடை மேல்பகுதியில் சாய்ந்து செல்லுகிறது. இதனால் இந்த நிழற்குடை நாளுக்கு நாள் சேதம் அடைந்து வருகிறது. ஆதலால் பயணிகளின் பாதுகாப்பு கருதி நிழற்குடை மேல் பகுதி செல்லும் மரக்கிளையை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தும் மரத்தை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.
