- சென்னை
- நல்லம்பாக்கம்
- வண்டலூர், திருநாராயணபுரம்
- பெருமாள் கோயில்,
- ஷங்கர்
- அன்னை சத்யா தெரு, டெய்லர்
- செல்வராணி
- தினேஷ்
- தேவதர்ஷினி
சென்னை: வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம், பெருமாள் கோயில் அருகே உள்ள திருநாராயணபுரம், அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் சங்கர் (50), டெய்லர். இவரது மனைவி செல்வராணி (38). தம்பதிக்கு தினேஷ் (19) என்ற மகனும், தேவதர்ஷினி (16) என்ற மகளும் உள்ளனர். செல்வராணி, நல்லம்பாக்கத்தில் உள்ள யுனி ஹோம் என்ற நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். அப்போது, அந்த ஹோமில் குடியிருந்த குமரேசன் என்பவரிருடன் தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், குமரேசனுடன் பேசுவதை செல்வராணி தவிர்த்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி செல்வராணி வீட்டில் இருந்து சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சங்கர் தனது மனைவி காணவில்லை என்று தாழம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், செல்வராணிக்கு கடைசியாக போன் செய்த நபரின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது செல்வராணிக்கு கடைசியாக போன் செய்தது குமரேசன் என தெரியவந்தது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு குமரேசனை பிடித்து விசாரணை செய்தபோது, செல்வராணி தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி செல்வராணியை செல்போனில் தொடர்பு கொண்டு, உன்னிடம் கடைசியாக ஒருமுறை பேச வேண்டும் வா, எனக்கூறி, பைக்கில் கீரப்பாக்கத்தில் இருந்து கல்வாய் பகுதிக்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள ஒத்திவாக்கம் வன காட்டுக்கு அழைத்துச்சென்றேன்.
அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது, ஏற்பட்ட தகராறில் செல்வராணியை, அவரது துப்பட்டாவில் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன், என தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் குமரேசனை போலீசார் அழைத்துச்சென்று காட்டில் அழுகிய நிலையில் இருந்த செல்வராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் (31) என்பவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு மனைவி ஜெயஸ்ரீ, மகள் யாஷிகா உள்ளனர். திருமணம் ஆவதற்கு முன்பு ஏற்கனவே செல்வராணிக்கும் குமரேசனுக்கும் கடந்த 5 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
பின்னர், குமரேசனை விட்டுவிட்டு கார்டன் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் கோபால் என்பவருடன் செல்வராணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் செல்வராணியை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தாழம்பூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் குமரேசனை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.
The post கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் தனியார் நிறுவன பெண் ஊழியர் கழுத்தை நெரித்து படுகொலை: வனப்பகுதியில் சடலத்தை வீசி தப்பிய கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.
