×

மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது: துணை முதல்வர் உதயநிதி டிவிட்

சென்னை: மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது:  சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது.

கல்வி-பண்பாடு-கலாச்சாரம்-பொருளாதாரம் என பல்வேறு தளங்களில் மகளிரின் தற்சார்பையும்-சுதந்திரத்தையும் உறுதி செய்வதே திராவிட இயக்கத்தின் லட்சியம். அதனை, பெரியார்-அண்ணா-கலைஞர் வழியில், மகளிர் விடியல் பயணம்-புதுமைப்பெண் – கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற மகளிர் நல திட்டங்கள் மூலம் நம் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது: துணை முதல்வர் உதயநிதி டிவிட் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai ,Udhayanidhi Stalin ,International Women's Day ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...