×

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தமிழக வீரர் அரவிந்த் சாம்பியனாகி அசத்தல்

பிராக்: பிராக் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். செக் குடியரசில் உள்ள பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. 9வது சுற்று போட்டியில் துருக்கி வீரர் குரெல் எடிஸ் உடன் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் மோதினார். துவக்கத்திலேயே சிப்பாயை அரவிந்த் இழந்தபோதும், அதை தனக்கு சாதகமாக்க குரெல் தவறினார். அதன் பின் இருவரும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்த அரவிந்த் சாம்பியன் பட்டம் பெற்றார். தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரர் பிரக்ஞானந்தா 9வது சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வி அடைந்தார். அதையடுத்து, அவருக்கு 5 புள்ளிகள் கிடைத்தது. அதனால், 5 புள்ளிகள் பெற்ற வியட்நாம் வீரர் குவாங் லியம் லெ, சீனா வீரர் வெ யி ஆகியோருடன் 2ம் இடத்தை பிரக்ஞானந்தா பகிர்ந்து கொண்டார்.

* இந்திய வீரர் பிரணவ் ஜூனியர் செஸ் சாம்பியன்
மான்டிநிக்ரோ நாட்டின் பெட்ரோவாக் நகரில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 11 சுற்றுகள் நடந்த இப்போட்டிகளில் 7ல் வெற்றி, 4ல் டிரா கண்டார். அதனால் புள்ளிப் பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றினார்.

The post பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தமிழக வீரர் அரவிந்த் சாம்பியனாகி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Prague Masters Chess Tamil ,Aravind ,Prague ,Aravind Chidambaram ,Tamil Nadu ,Prague Masters Chess Championship ,Prague Masters Chess ,Prague, Czech Republic ,Turkey… ,
× RELATED 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா;...