×

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பின்பற்றி பெங்களூரில் ஹஜ் பவன் அறிவிப்பு: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பின்பற்றி பெங்களூரில் ஹஜ் பவன் அமைக்கப்படும் என அறிவிப்பை இந்திய ஹஜ் அசோசியே ஷன் தலைவர் வரவேற்றுள்ளார். இந்திய ஹஜ் அசோ சியேசன் தலைவர் பிரசி டெண்ட் அபூபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்:

“கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தமிழ்நாட்டை பின்பற்றும் வகையில் அமைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது .

தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு அரணாக தமிழ்நாடு முதலமைச்சர் எத்தகைய திட்டங்களை தீட்டி வருகிறாரோ அதை அப்படியே செயல்படுத்தி இருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. அந்த வகையில் பார்க்கிறபோது;இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஹஜ் பவன் கட்டப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான காலியான இடங்களில்; 15 அரசு பெண்கள் கல்லூரிகள் தொடங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அது மட்டும் அல்லாமல் உலமாக்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் 6ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர் நலன் காப்பதில் முதல்வர்களின் முதல்வராக இருக்கிறார்.

சிறுபான்மையின மக்களில் ஒருவராக நின்று திட்டங்கள் தீட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியை காங்கிரஸ் கூட்டணியில் திமுகவோடு அங்கம் வகிக்கிறோம் என்ற தோழமை உணர்வோடு பயணிக்கும் கர்நாடக முதல் அமைச்சரும் பின்பற்றுவது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஏற்படுத்துகிறது.

இரண்டு முதலமைச்சர்களும் ஒரே வழியில் பயணிப்பது நாகரிகமான தொடக்கமாக மாறியிருப்பது நல்லதோர் தொடக்கம்” என தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பின்பற்றி பெங்களூரில் ஹஜ் பவன் அறிவிப்பு: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mu. K. Haj Bhavan ,Bangalore ,Stalin ,President ,Indian Hajj Association ,Chennai ,Mu. ,K. ,Haj Association of India ,Haj Bhavan ,Indian Haj ,Aso Siesen ,Prassi Dent Abubakar ,Karnataka ,Chief Mu. K. Haj Bhavan ,Dinakaran ,
× RELATED மதி அங்காடியின் விழாக்கால விற்பனை...