- மாஜி அமைச்சர்
- அண்ணாமலை
- நாதம் விஸ்வநாதன்
- பாஜா மாநிலம்
- ஜனாதிபதி
- அண்ணாமலை
- அண்ணாமலை கோவா,
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
சிவகங்கை: அதிமுக யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை என பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டோவோடு போட்டி போடும் கட்சி, அவர்களுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் என்று கூறியவர்கள், இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கின்றனர் என அதிமுகவை மறைமுகமாக விமர்ச்சித்து இருந்தார்.
இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிவகங்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளில், ஒரு தொகுதி கூட குறையக்கூடாது என்பது அதிமுகவின் நிலைப்பாடு.
அதிமுக யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி என்று எங்கள் பொதுச்செயலாளர் கூறவில்லை. அண்ணாமலை பேசுவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை பேசாதபோது இதுபோல் கருத்து தெரிவிப்பது தேவையற்றது’ என்றார். முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மா.பா. பாண்டியராஜன் மோதல் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து நழுவி சென்றார்.
The post அதிமுக யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை அண்ணாமலைக்கு மாஜி அமைச்சர் பதிலடி appeared first on Dinakaran.
