×

பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல: எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாஜகவால் தோற்றோம் என்றவர்கள் பாஜக கூட்டணிக்காக தவம் கிடப்பதாக அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி, பெண் நிர்வாகிகளுக்கு பகிர்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அண்ணாமலை பேசியது குறித்து அதிமுக மீது அவதூறு பரப்பவேண்டாம். கூட்டணி வைக்க எந்த காலத்திலும் அதிமுக தவம் கிடந்தது இல்லை. கூட்டணிக்காக அதிமுக தவம் கிடக்கிறது என அண்ணாமலை சொன்னதாக தவறான தகவல் பரப்ப வேண்டாம். அதிமுக என்று குறிப்பிட்டு அண்ணாமலை பேசினாரா? தவறா சொல்லாதீங்க..” தேர்தலுக்கு 6 மாதம் முன்பு கூட்டணி குறித்து பதில் சொல்கிறேன் என்று கூறினார்.

The post பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP alliance ,Edappadi Palanisami ,Chennai ,Atamugawa ,BJP ,Adimuga Head Office ,Raiappetta, Chennai ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்