×

உலக மகளிர் தினத்தை ஒட்டி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Pink Auto திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: மகளிர் தினத்தை ஒட்டி பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்ற சூழலில் அதனை கூடுதலாக வலுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ‘சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி ரூ.2 கோடி செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (பிங்க் ஆட்டோ) அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக அரசு, அரசிதழில் பதிவு செய்தது. அதில் ‘ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும், பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும், அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தை கண்காணிக்கும் சாதனம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதற்கட்டமாக 250 மகளிருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

The post உலக மகளிர் தினத்தை ஒட்டி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Pink Auto திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : World Women's Day ,Chief Minister ,Pink Auto ,K. Stalin ,Chennai ,MLA ,Auto Project ,Women's Day ,Tamil ,Nadu ,K. ,Stalin ,Mu Thackeray ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக உஸ்மான் கவாஜா அறிவிப்பு!