×

தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம்: தஞ்சை கலெக்டர் உத்தரவு

 

தஞ்சாவூர், மார்ச்8: தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 தாசில்தார்களை இடமாற்றம் செய்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார் நிலையில் பதவி வகித்து வரும் 17 பேரை இட மாற்றம் செய்து தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து வௌியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் சிவக்குமார் தஞ்சை தாசில்தாராகவும், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் திருவையாறு தாசில்தாராகவும், தஞ்சை மாவட்ட மாநில நெடுஞ்சாலை (நிலஎடுப்பு)தனி தாசில்தார் யுவராஜ் ஓரத்தநாடு தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மங்கையர்கரசி பூதலூர் தாசில்தாராகவும், கும்பகோணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சாந்தமீனா திருவிடைமருதூர் தாசில்தாராகவும், பட்டுக்கோட்டைநகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் சுப்பிரமணியன் பேராவூரணி தாசில்தாராகவும், ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தர்மேந்திரா பட்டுக்கோட்டை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் (நிலஎடுப்பு) தனி தாசில்தார் பழனிவேலு பாபநாசம் தாசில்தாராகவும், பட்டுக்கோட்டை நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் சுந்தரமூர்த்தி திருவோணம் தாசில்தாராகவும், தஞ்சை தாசில்தார் அருள்ராஜ் தஞ்சை நகர நிலவரித் திட்ட தனி தாசில்தாராகவும், ஒரத்தநாடு தாசில்தார் சுந்தரசெல்வி பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பூதலூர் தாசில்தார் மரிய ஜோசப் கும்பகோணம் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தாராகவும், திருவிடைமருதூர் தாசில்தார் பாக்கியராஜ் கும்பகோணம் துணை கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார் பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் (நில எடுப்பு) தனி தாசில்தாராகவும், பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமார் பேராவூரணி தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் (நிலஎடுப்பு) தனி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் (நிலஎடுப்பு) தனி தாசில்தார் கார்த்திகேயன் தஞ்சை கலெக்டர் அலுவலக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் பறக்கும்படை தனி தாசில்தாராகவும், பேராவூரணி தாசில்தார் தெய்வானை பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் அறுவடை தொடங்கிய காலகட்டத்தில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு காரணமாக அறுவடை பணிகள் மந்தமாக இருந்தது. ஆனால் தற்போது அறுவடை இயந்திரங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் கொண்டு வரப்பட்டு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை கிணற்றுப் பாசனத்தை வைத்து கோடைகால நெல் சாகுபடிக்காக தயார் செய்து வருகிறார்கள்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம்: தஞ்சை கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tahsildars ,Thanjavur district ,Thanjavur Collector ,Thanjavur ,Collector ,Priyanka Pankajam ,Tahsildar ,Thanjavur district… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை